திடீரென்று நேற்று அலுவலகத்தில் ஓர் யோசனை தோன்றிற்று. ஏய் நிறுத்துப்பா !!! மொதல்ல செந்தமிழ்ல எழுதரதா இல்ல சாதா தமிழ்ல எழுதரதான்னு முடிவு பண்ணுவோம். எப்போ எழுத முடிவெடுத்தாலும் நாம எழுதறது மத்தவங்களுக்கு புடிக்குமா , இல்ல செந்தமிழ்ல எழுதினா யாராவது நக்கல் பண்ணுவாங்களான்னு நினைச்சு மண்டைய ஒடச்சுக்க வேண்டியிருக்கு. எவனொருவன் மற்றவர்கள் நினைப்பதை எண்ணி கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்கிறானோ அவனே வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி அடைகிறான்னு அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் சொல்லியிருக்கார்.இதைத்தான் "முஸ்தாச் ஈஸ் தி மிரர் ஆப் ஹார்ட்" ன்னு தில்லுமுல்லு ல தலைவர் சொல்லியிருக்கார் . அது சரி , இப்போ மாட்டருக்கு வருவோம் .... ஒரு வலைத்தளம்ஒன்றுதொடங்கவேண்டும் என்று திடீர் ஆசை. நாம் தினமும் அதிகமாக பயன்படுத்துகிற வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும் . தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் அவை எவ்வாறு உச்ச்சரிக்கபடிகின்றன , எவ்வாறான மாறுதலுக்குஉள்ளாகின்றன என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி செய்து அவற்றை இதில் பகிர்ந்து கொள்ள வே...