பயணம் - நம்முடைய உள் உணர்ச்சிகளை குறித்தும், நம் பலம் மற்றும் பலவீனங்களைக் குறித்தும் , நம்முடைய சமூக கண்ணோட்டத்தினை குறித்தும் , சக மனிதர்களைக் குறித்தும் , இன்ன பல இயல்புகளைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள , நம்மால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட , யாராலும் ஆக்கிரமித்துக்கொள்ள இயலாத , நமக்கே நமக்கான தருணம். எனக்கு பயணித்தல் என்பது பிடித்தமான, மனதிற்கு ஒருவித மகிழ்வை தரக்கூடிய நல்லதொரு அனுபவமாகவே இருந்த வந்துள்ளது . ஆனால் ஒரு பயணத்திற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்வதும் , அதற்குத் தேவையான ஒரு முன்னேர்பாட்டினை செய்வதும்தான் எனக்கு சிறிதும் அறிவிற்கு எட்டாததாகவும் , மனதிற்கு தொய்வு தரக்கூடியாதகவும் இருக்கின்றது . மற்றபடி பயணம் என்பது ஆழ்ந்த தியானத்தில் என்னை ஆட்ப...