Skip to main content

Posts

மகளிர் தினம்...மறுதினம் ?

இன்னும் ஓரிரு நாட்களில் சர்வதேச மகளிர்   தினம் அனுசரிக்கப்படும் . ஆமாம் அனுசரிக்கப்படவேண்டிய ஒன்றுதான் . ஆம் போற்றுதலுக்குரியவள் அவள் . மகளிர் தின சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பப்படும் . மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் , சிறப்பு தள்ளுபடி விற்பனைகளில் பல மணிநேரம் செலவிடுவோம் . ஐ   சல்யூட் விமன் தொடங்கி   பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போன்று   பல தரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் , கவிதை  , பேஸ்புக் ஸ்டேடஸ்    இன்ன பிற . பல பெண்களை நினைவுகூர்வோம் . பெண் தாயாகவும் , மனைவியாகவும் , மகளாகவும் , ஆயாவாகவும் , வேலைக்காரியாகவும் , ஆசிரியையாகவும் ,   ஆசானாகவும் , போகப்பொருளாகவும் , ஏன் தெய்வமாகவும் இருப்பதை உணர்ந்து சிலிர்ப்படைந்து அவளை எண்ணி பெருமிதம் கொள்வோம் . ஒவ்வொரு ஆணின் மகத்தான வெற்றிக்குப்பின்னால் இருப்பது ஒரு பெண் என்று நம்முடைய பணிவினை பறைசாற்றுவோம் . எல்லாவற்றையும் விட உயர்ந்தவள் பெண் என்று சூளுரைப்போம் . ஆம் போற்றுதலுக்குரியவள்   அவள் . இன்னொரு காலைப்பொழ...
Recent posts

Think With Me - By Subrata Roy Sahara – Book Review

An honest, poignant, well- articulated book that highlights and provides the required acumen to the very core issues of our own Country. The author of this book has recorded the fundamental issues Political Leadership, Population, Education System, Media and Religion as the hindrance for the growth and prosperity of our country and the citizens.   The Author being our own countrymen needn’t have to analyze or dig deep to understand the above-mentioned core issues that actually hinders the growth of this Country in almost all aspects. All I have to do is to agree with the author and nothing much as we all know this already and living with it.   As far as the Electoral System and Political Leadership we all know the current state of it and all of us wanted this to improve for the benefit of the entire nation. In this front, the author states that people with narrow emotional sphere should be removed from big responsibilities and I don’t think anyone would disagree with...

யாம் பெற்ற இன்பம்

ஆதவனின் சிறுகதை தொகுப்பில் எனக்கு பிடித்த சில எழுத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. இந்த சமூக கட்டமைப்பு குறித்து , " இங்கே அறையில் மனது நிச்சலனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன் தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள் , சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை . " பணம் குறித்து ஒரு சிறுகதையில் , " பணம் மனிதனுடைய தோற்றத்தையும், மனப்போக்கையும் மிகவும் மாற்றி விடுகிறது. தூய்மை, எளிமை முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கச் செய்து விடுகிறது. பணம் சிலவற்றை கொடுப்பதுபோலச் சிலவற்றை எடுத்துக்க் கொண்டும் விடுகிறது. பணம் கொடுக்கிற விஷயங்கள் பணம் எடுத்துக்க் கொள்ளும் விஷயங்களை விட உண்மையில் மதிப்பு வாய்ந்தவைதாமா ? " நாம் சூழ்நிலைகளின் கைதிகளாய் பல்வேறு வேஷம் தரித்து வாழ்க்கை முழுவதும் உழன்று கொண்டிருப்பதை "கால் வலி" என்ற கதையில் அப்பட்டமாக உணர்த்தும் தருணம் இங்கே , " இப்போது யோசிக்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாள் அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே.அவன்...

அடிமை , சலிப்பு - இது தான் நான்

நான் ஆதவன் அவர்களின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டு சிலகாலம் ஆகிவிட்டது.  அவரின் எழுத்து நடை , அணுகுமுறை ,  சொல்லும் விதம் , உவமைகள் , எக்ஸ்ப்ரெசென்ஸ் மற்றும்   இந்த சமூக கட்டமைப்பின் மீதுள்ள   அவரின் பார்வை , அவரின் கதாபாத்திர சிருஷ்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .   அவரின் படைப்புகள் முற்றிலும் மனிதர்கள் குறித்தும், மனிதர்களின் உள்ளுணர்வுகள் குறித்தும், மனித மனங்களில் எழும் சுய கேள்விகள், சமூக கட்டமைப்பு, அவற்றின்பால் நம்முடைய சலிப்பு முதலியனவற்றைக் குறித்தும் தான். அவரின் கதாபாத்திரங்கள்  எதையும் சட்டென்று ஊகிக்காமல் , பல கேள்விகளுக்கு தம்மை உள்ளக்கி கொள்ளுவதும், அவற்றில் காணப்படும் ஒரு வித நிதானம் அவருடைய எழுத்திலும் பிரதிபலிக்கும். டில்லி, அரசு வேலை , மிடில் கிளாஸ், சமூகம் , அதற்காக நாம் அணியும் பலவித வேஷம், எல்லாவற்றிலும் உள்ள சலிப்பு , நாம் நமக்காக அல்லாமல்  பிறர்க்காக என்பதை நம்மில் திணிக்கும் இந்த அமைப்பு ஆகியனவற்றின் ஆக்கிரமிப்பு பெருமளவில் தென்படும்.குறிப்பாக அவரின் எழுத்துக்கள், இந்த சம...

ஆதவனின் அறிமுகம்

" பிறர் நம்மிடம் எந்த வேஷத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையறிந்து அதை அணிவதால் வாழ்கையின் கட்டங்கள் சுமுகமாக கழிகின்றன. என்றாலும் புழுக்கம் தாங்காமல் வேஷங்களை எதிர்த்து திமிறத் தொடங்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது சண்டை வருகிறது..." தற்பொழுது  ஆதவன் அவர்களுடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அண்ணன் "கண்ணன்" மூலமாக ஆதவன் அறிமுகமானார். ஏன் முக்கால்வாசி எழுத்தாளர்கள் , புத்தகங்கள் எனக்கு அறிமுகபடுதப்பட்டது அவராலே என்று கூட சொல்லலாம். நாங்கள் இருவரும் புத்தகங்கள் படிப்பது, பிறகு அவற்றைக் குறித்து ஒரு அழகிய மாலை வேளையில் , வீட்டின் பால்கனியில் நன்றாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு, கோத்தாஸ் காபியின் அரோமாவில் மிதந்து கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வோம். பல புதிய எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களுடைய நேர்த்தி குறித்தும் அளவளாவிக் கொண்டிருப்போம். யாரோ கூப்பிடும் சத்தம். கண்விழித்தேன். அவரின்பால் இருந்த பயம் காரணமாகவோ இல்லை இறுக்கம் காரணமாகவோ தெரியவில்லை நான் அவரிடம் என் படிப்பு மற்றும் வேலை தவிர வே...

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...