ஆதவன் அவர்களின் காகித மலர்கள் புத்தகம் படித்ததிலிருந்து என்னை சதா வருத்திக்கொண்டே இருக்கிற சில எழுத்துக்கள் இங்கே, "கடைசியில் எல்லாம் இப்படித்தான் வந்து முடிகிறது. அர்த்தமும் நோக்கமும் மறைந்து வெறும் கூடு மட்டும் மிஞ்சுகிறது. அதுவே உண்மையென்று மயங்குகிறோம்." "நாம் நாமாக இருக்கமுடியாமல் பல விதமான பிம்பங்களை உருவாக்கி , பின் நம்முடைய பிம்பங்கள் சிதைபடாமல் காப்பதர்க்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறோம்." "இந்தக் கணத்தில் இவனும் நானும் ஒன்று என்று கொள்வதன் மூலம் நான் என் பொறுப்புகளைத் தட்டிடிக்கழிக்க முயல்கிறேன். இவனும் நானும் ஒன்றல்ல. நான் இவனை விட அதிக வாய்ப்புகளை பெற்றவன், அதிக வசதிகள் உள்ளவன். எனவே அதிக பொறுப்புகள் உள்ளவன். இந்த சமூக அவலங்களை போக்க வேண்டிய பொறுப்புகளை உடையவனாகிறேன்.நான் இந்த சிரமங்களை, இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன்". - ஆதவன்., காகித மலர்கள் ... ஆமாம் நான் இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன். பரிகாரத்தைத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். தேடல் வி...