Skip to main content

Posts

Showing posts from July, 2010

ரிவர்ஸ் ஸ்விங்

நான் இன்றொரு நல்ல பவுலர் ஆனதுக்கு ஒரு முக்கிய காரணம் என் அண்ணன் விஸ்வாஸ். அதுக்காக விஸ்வாஸ் ஏதோ அலன் டொனால்ட் ரேஞ்சுக்கு எனக்கு கோச்சிங் கொடுத்ததா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்லை. இதுக்கு காரணம் நாங்க எப்போ கிரிக்கெட் விளையாடினாலும் அவன் கையில் பேட்டை எடுத்துக்கொண்டு என்னை பவுலிங் போடச்சொல்லுவான். அவன் என்னை “கார்டனி வால்ஷ்” மாதிரி பால் போடச்சொல்ல நானும் ரமாட்டி வீட்டு கொல்லபுரத்திலிருந்து ஓடி வந்து பால் போட்ட பின் வால்ஷ் மாதிரி என் ஆக்ஷன் இருந்ததான்னு கேக்க அவனும் அப்படியே வால்ஷ் மாதிரி இருந்ததுன்னு சொல்லி என்ன ஒரு ஓவர் போடச்சொல்ல அப்படி ஆரம்பிச்சது தான் என்னுடைய பௌலிங் பிரவேசம். இப்படி வால்ஷ் மாதிரி ஒரு ஓவர், ஒரு ஓவர் முடிஞ்சதும் அம்ப்ரோஸ் மாதிரி ஒரு ஓவர், பாட்ரிக் பாட்டர்சென் மாதிரி ஒரு ஓவர், பிலிப்ஸ் தெப்றேற்றிஸ், ஆலன் டொனால்ட், மேக்டர்மட், கபில் தேவ், கும்ப்ளே, பவுல் ரீபில், மனோஜ் பிரபாகர், ஹீத் ஸ்ட்ரீக், வார்னேன்னு அப்போ இருந்த 9 டெஸ்ட் ப்ளேயிங் நேஷன்ஸ்ல இருந்த ஒவ்வொரு பவுலர் மாதிரியும் என்னை பவுல் பண்ணச்சொல்லி அவன் நல்லா ரைட், லெப்ட்ன்னு மாறி மாறி காஜ் வாங்குவான். நானு...

என் முதல் சிக்ஸர்

வேன்யு : போத்தனூர் G.D. டேங்க் செட்டியார் வீட்டு புளியமரத்தடி பவுலர் : சந்துரு பேட்ஸ்மேன் : விக்னேஷ் பௌண்டரி : தண்ணி பைப் காம்பவுண்டு சுவர் – 4 ரன், அசோக மாமா ஆட்டுசாலை – 2 granted,ருக்கு வீட்டு சுவர் - 2 granted. எனக்கு நினைவுதெரிஞ்சு சுமார் எட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு கிரிக்கெட்டப்பத்தி அவ்வளவா தெரியாதுன்னாலும் வீட்ல விஸ்வாஸ், பாலு, கண்ணன் அண்ணா , சஞ்ஜீவ் அண்ணா எல்லரோடையும் போய் விளையாடுவேன். அப்படி விளயாடிட்டிருந்த எனக்கு கிரிக்கெட்ல ஆர்வம் வரதுக்கு காரணமா இருந்தவர்கள் ரெண்டு பேர். ஒருத்தர் வெஸ்ட்இண்டீஸின் ப்ரையன் லாரா, இன்னொருத்தர் வீட்டு பக்கத்தில் இருந்த ஜெயராம் போஸ்ட்மாஸ்டர். போஸ்ட்மாஸ்டர் எப்பவுமே என்ன ஸ்ரீகாந்த்’ன்னு தான் கூப்பிடுவார். சும்மா நான் பேட்டை வச்சு டொக், டொக்ன்னு தட்டினா உடனே பலே ஸ்ரீகாந்த்ன்னு சொல்லுவார்.(இப்படி இவரு உசுப்பேத்தி விட்டு உசுப்பேத்தி விட்டே உடம்ப ரணகளமகிட்டார்) . நாங்க எல்லாம் சேர்ந்து விளையாடுவது வீட்டுக்கு எதிரே உள்ள புளிய மரத்தடியில் தான்.நான், விஸ்வாஸ்,பாலன், கண்ணன் அண்ணா, சஞ்ஜீவ் அண்ணான்னு எங்க வீட்டிலேயே ஒ...