Skip to main content

Posts

Showing posts from 2011

KRA - Key Results Area

இன்னிக்கி காலைல அலுவலகத்தில் ஸ்டேடஸ் மீட்டிங்ல அப்பரைசல் பத்தியும் , KRA செட் பண்ணனும்னும் பேசிக்கிடிருந்தோம். KRA டாகுமென்ட் ஓபன் பண்ணி பாத்தேன். அதுல ஒரு KRA "ஆன் டைம் டெலிவரி ஆப் ஆல் அசைன்டு டாஸ்க்"ன்னு போட்டு அதுக்கு வெயிடேய்சு 40 % ன்னு போட்டிருந்தது. நான் achievements செக்ஷன்ல "ஆல்வேஸ் தேளிவேர்ர்டு டாஸ்க்ஸ் ஆன் டைம் "ன்னு என்னோட பதிலை பதிவு செஞ்சேன். அப்போ யோசிச்சுப்பாத்தேன், அலுவலக வேலையை மட்டும் டெலிவரிங் ஆன் டைம், ஆனா என் சொந்த வேலைன்ன டேகிங் மை ஒன் ஸ்வீட் டைம் !!! இனிமே வாழ்கைலேயும் ஒரு KRA வேணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு KRA செட் பண்ணி அதுக்கு வெயிடேய்சு போட்டாதான் வேலை நடக்கும்ன்ன போடற KRA வ ... எட்ற கைப்புள்ள வண்டிய !!!!

பொரிமா !! பொரிமா !!!

என்கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு . எந்தவொரு வேலையையும் அவ்வளவு சீக்கிரமா பண்ணிட மாட்டேன். நல்லா நிதானமா, பொரிமா (பாண்டி தமிழ் நினைவுக்கு வந்திட்டுது), ஒரு தடவைக்கு நாலு தடவை மொறயா யோசிச்சு , பண்ணவா வேண்டாமா , இன்னிக்கா நாளைக்க, இப்பவேவா இல்ல அப்புரமாவான்னு எனக்குள்ள ஒரு போர் (நீங்க நினைக்கும் அளவுக்கு லிபியாவோ , ஒடிசி டானோ கிடையாது) நடக்கும். பிறகு அதுபத்தி கொஞ்சம் கூட யோசிக்காமலேயே காலத்தை நகர்த்தி ஒரு நாள் திடீர்னு (கோமனத்தில இடி விழுந்த மாதிரி...courtesy என் உறவினர்கள்) போய் அந்த வேலையை முடிச்சிட்டு வந்து உக்காந்து யோசிச்சு பாத்தா "எல்லார்க்கும் இந்த பாக்கியம் கிடைக்குமான்னு" தான் எனக்கு தோனும். என்னைப்பற்றி நன்கரிந்தவர்களுக்கு இது பழகிப்போன விஷயம். என்ன தெரியாம என்கிட்டே ஒரு வேலையை ஒப்படச்சவருக்கு இது மண்டகாயர விஷயம். ஆகையினால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். யாரையும் அந்த மாதிரி ஒரு நிலைக்கு ஆளாக்குவது இல்லை என்று. அதுக்காக நான் என்ன மாத்திக்க போறதில்லை. மாறாக என்னை நானே ப்ரொமோட் பண்ணப்போறேன். என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு நான் என்னைப்பற்றி தெரியவைக்க, புரியவைக்கப்ப...

வாழ்நாள் கைதிகள்

ஆதவன் அவர்களின் காகித மலர்கள் புத்தகம் படித்ததிலிருந்து என்னை சதா வருத்திக்கொண்டே இருக்கிற சில எழுத்துக்கள் இங்கே, "கடைசியில் எல்லாம் இப்படித்தான் வந்து முடிகிறது. அர்த்தமும் நோக்கமும் மறைந்து வெறும் கூடு மட்டும் மிஞ்சுகிறது. அதுவே உண்மையென்று மயங்குகிறோம்." "நாம் நாமாக இருக்கமுடியாமல் பல விதமான பிம்பங்களை உருவாக்கி , பின் நம்முடைய பிம்பங்கள் சிதைபடாமல் காப்பதர்க்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறோம்." "இந்தக் கணத்தில் இவனும் நானும் ஒன்று என்று கொள்வதன் மூலம் நான் என் பொறுப்புகளைத் தட்டிடிக்கழிக்க முயல்கிறேன். இவனும் நானும் ஒன்றல்ல. நான் இவனை விட அதிக வாய்ப்புகளை பெற்றவன், அதிக வசதிகள் உள்ளவன். எனவே அதிக பொறுப்புகள் உள்ளவன். இந்த சமூக அவலங்களை போக்க வேண்டிய பொறுப்புகளை உடையவனாகிறேன்.நான் இந்த சிரமங்களை, இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன்". - ஆதவன்., காகித மலர்கள் ... ஆமாம் நான் இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன். பரிகாரத்தைத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். தேடல் வி...