இன்னும் ஓரிரு நாட்களில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படும் . ஆமாம் அனுசரிக்கப்படவேண்டிய ஒன்றுதான் . ஆம் போற்றுதலுக்குரியவள் அவள் . மகளிர் தின சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பப்படும் . மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் , சிறப்பு தள்ளுபடி விற்பனைகளில் பல மணிநேரம் செலவிடுவோம் . ஐ சல்யூட் விமன் தொடங்கி பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போன்று பல தரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் , கவிதை , பேஸ்புக் ஸ்டேடஸ் இன்ன பிற . பல பெண்களை நினைவுகூர்வோம் . பெண் தாயாகவும் , மனைவியாகவும் , மகளாகவும் , ஆயாவாகவும் , வேலைக்காரியாகவும் , ஆசிரியையாகவும் , ஆசானாகவும் , போகப்பொருளாகவும் , ஏன் தெய்வமாகவும் இருப்பதை உணர்ந்து சிலிர்ப்படைந்து அவளை எண்ணி பெருமிதம் கொள்வோம் . ஒவ்வொரு ஆணின் மகத்தான வெற்றிக்குப்பின்னால் இருப்பது ஒரு பெண் என்று நம்முடைய பணிவினை பறைசாற்றுவோம் . எல்லாவற்றையும் விட உயர்ந்தவள் பெண் என்று சூளுரைப்போம் . ஆம் போற்றுதலுக்குரியவள் அவள் . இன்னொரு காலைப்பொழ...