சம்மர் கேம்ப் என்ற வார்த்தை எல்லா பெற்றோர் மற்றும் குழந்தைகள் சகஜமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நான் என்னுடைய சம்மர் கேம்ப் என்னவாயிருக்கும்னு யோசிச்சதுல வந்தது தான் இங்கு நான் எழுதியிருப்பது. என்னுடைய சின்ன வயசில பள்ளி விடுமுறை நாட்களை எப்படி செலவிட்டேன்னு யோசிச்சா ரொம்ப மகிழ்ச்சியான பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருது. லீவ் நாட்கள்ல காலைல எழுந்து சாப்பிட்டு முடிச்சு வெளிய வந்த திரும்ப அடுத்ததா எப்போ பசிக்கிதோ அப்போதான் வீட்டைப்பத்தி நினைப்பேன். முதல்ல வீட்டு முன்னாடி இருக்கிற புளிய மரத்தடியில் கிரிக்கெட் விளையாடணும், அது முடிஞ்சா இருக்கவே இருக்கு G.D. வாட்டர் டேங்க். G.D. வாட்டர் டேங்க் மேல ஒவ்வொரு படியா ஏறி உச்சியில போய் உக்காந்து அரட்டை அடிக்கறது , புளியங்காய் சாப்பிடறது, டேங்க் வாட்ச்மேன் காளிமுத்து @ செந்திலுக்கு தெரியாம ஏறி விளயடரதுல ஒரு த்ரில். அது போதாதுன்னு பக்கத்திலுள்ள G.D. மெடிக்கல்ஸ் ஹாஸ்பிட்டல் காம்பௌண்டுகுள்ள ஓடிப்பிடிச்சு விளயாடறதும், இடையில் தண்ணி தாகம் எடுத்தா காம்பௌண்டு வழியா வந்து ரோட்டுமேல இருக்கற உப்புத்தண்ணி குழாயில ஸ்வயின் ப்ளு அது இதுன்னு எந்த...