Skip to main content

Posts

Showing posts from November, 2008

என் முதல் கச்சேரி அனுபவம் - மயிலாப்பூர் சென்னை

நான் முதன் முதலா கர்நாடக சங்கீத கச்சேரிக்கு போனது அன்னக்கித்தான் . அதுவரை சிலபல கச்சேரிகளை என் வீட்டு பக்கத்தில் இருக்கற விநாயகர் கோவிலில் நடக்கற லட்சர்ச்சனையின்போது கேட்டிருக்கேன் . அப்போ எனக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம கணபதி அவருடைய வாய் பாட்டும் , மிருதங்கம் ஸ்ரீதருடைய ( இவருடைய தலைக்கு அப்புறம் அவரோட கருப்பு கலர் ஹீரோ ஹோண்டா சீடி 100 பைக் தான் ஞபகதுக்கு வரும் ) மிருதங்கமும் தான் . நிற்க . T.M கிருஷ்ணா ' கார்த்திகேயா காங்கேயா ' ன்னு பாட , காரைக்குடி மணி அவர்கள் மிருதங்கம் வாசிக்க , நான் , விசா , சஞ்சீவ் அண்ணா , முத்து அண்ணான்னு ஒரு கூட்டமே உக்காந்து ரசிக்க கச்சேரி பலமா தான் போயிட்டிருந்தது . நம்ம முத்து அண்ணா , சஞ்சீவ் அண்ணா ரெண்டு பேரும் காலையில் இருந்து இன்னக்கி தலைவர் வசிக்கிறார் ன்னு ஒரே பில்ட்அப் . நானும் யார்ரா அந்த தலை ன்னு பாத்த அது காரைக்குடி மணி தான் . இவங்க ரெண்டு பேரும் மிருதங்கம் கத்துக்கிட்டதாலதான் இவரை இவங்க தலை ன்னு சொல்லறாங்கன்னு எனக்கு பிடி கிடச்சுது . கட்சேரி சூ...