ஆதவனின் சிறுகதை தொகுப்பில் எனக்கு பிடித்த சில எழுத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. இந்த சமூக கட்டமைப்பு குறித்து , " இங்கே அறையில் மனது நிச்சலனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன் தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள் , சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை . " பணம் குறித்து ஒரு சிறுகதையில் , " பணம் மனிதனுடைய தோற்றத்தையும், மனப்போக்கையும் மிகவும் மாற்றி விடுகிறது. தூய்மை, எளிமை முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கச் செய்து விடுகிறது. பணம் சிலவற்றை கொடுப்பதுபோலச் சிலவற்றை எடுத்துக்க் கொண்டும் விடுகிறது. பணம் கொடுக்கிற விஷயங்கள் பணம் எடுத்துக்க் கொள்ளும் விஷயங்களை விட உண்மையில் மதிப்பு வாய்ந்தவைதாமா ? " நாம் சூழ்நிலைகளின் கைதிகளாய் பல்வேறு வேஷம் தரித்து வாழ்க்கை முழுவதும் உழன்று கொண்டிருப்பதை "கால் வலி" என்ற கதையில் அப்பட்டமாக உணர்த்தும் தருணம் இங்கே , " இப்போது யோசிக்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாள் அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே.அவன்...