நான் முதன் முதலா கர்நாடக சங்கீத கச்சேரிக்கு போனது அன்னக்கித்தான். அதுவரை சிலபல கச்சேரிகளை என் வீட்டு பக்கத்தில் இருக்கற விநாயகர் கோவிலில் நடக்கற லட்சர்ச்சனையின்போது கேட்டிருக்கேன். அப்போ எனக்கு தெரிஞ்சதெல்லாம் நம்ம கணபதி அவருடைய வாய் பாட்டும் , மிருதங்கம் ஸ்ரீதருடைய (இவருடைய தலைக்கு அப்புறம் அவரோட கருப்பு கலர் ஹீரோ ஹோண்டா சீடி 100 பைக் தான் ஞபகதுக்கு வரும்) மிருதங்கமும் தான். நிற்க.
T.M கிருஷ்ணா 'கார்த்திகேயா காங்கேயா' ன்னு பாட, காரைக்குடி மணி அவர்கள் மிருதங்கம் வாசிக்க , நான், விசா,சஞ்சீவ் அண்ணா, முத்து அண்ணான்னு ஒரு கூட்டமே உக்காந்து ரசிக்க கச்சேரி பலமா தான் போயிட்டிருந்தது.நம்ம முத்து அண்ணா, சஞ்சீவ் அண்ணா ரெண்டு பேரும் காலையில் இருந்து இன்னக்கி தலைவர் வசிக்கிறார் ன்னு ஒரே பில்ட்அப். நானும் யார்ரா அந்த தலை ன்னு பாத்த அது காரைக்குடி மணி தான். இவங்க ரெண்டு பேரும் மிருதங்கம் கத்துக்கிட்டதாலதான் இவரை இவங்க தலை ன்னு சொல்லறாங்கன்னு எனக்கு பிடி கிடச்சுது.
கட்சேரி சூடு பிடிக்க ஆரம்பிச்சது அங்க உட்கார்திருந்த எல்லாரும் கையாலும், காலாலும் தாளம் போடறத பாத்தப்போவே என்னால உணர முடிஞ்சது. நான் என் அண்ணன் விஸ்வநாதன பார்த்தேன், அவன் 'திரு திருன்னு' முழிசிட்டிருந்தான். வந்திருந்த அத்தனை பேரும் தாளம் போடறத பாத்தப்போ எனக்கு உள்ளூர ஒரு பயம்; 'எங்க நம்மள இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கிடுவாங்களோன்னு '. நானும் தாளம் போட ஆரம்பிச்சேன். அப்போ என் பக்கத்தில இருந்த ஒரு மாமா ( கட்சேரிக்கு வந்தாலே default ஆ அவரு மாமா தான் எனக்கு ஒரு எண்ணம்.) தாளம் போட்டுக்கொண்டே என்ன பாத்தார். நான் தாளம் போடறத கவனித்த அவர் ஒரு சின்ன புன்னகையுடன் கட்சேரியை ரசிக்க ஆரம்பிச்சார். எனக்கு உள்ளூர ஒரு நிம்மதி (இந்த சமூகம் என்ன அங்கீ கரிச்தை நினைத்து). இப்படி என்னோட முதல் கச்சேரி முடிஞ்சது.
Besh, bale...keep writing!
ReplyDelete