Skip to main content

வாழ்நாள் கைதிகள்

ஆதவன் அவர்களின் காகித மலர்கள் புத்தகம் படித்ததிலிருந்து என்னை சதா வருத்திக்கொண்டே இருக்கிற சில எழுத்துக்கள் இங்கே,

"கடைசியில் எல்லாம் இப்படித்தான் வந்து முடிகிறது. அர்த்தமும் நோக்கமும் மறைந்து வெறும் கூடு மட்டும் மிஞ்சுகிறது. அதுவே உண்மையென்று மயங்குகிறோம்."

"நாம் நாமாக இருக்கமுடியாமல் பல விதமான பிம்பங்களை உருவாக்கி , பின் நம்முடைய பிம்பங்கள் சிதைபடாமல் காப்பதர்க்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறோம்."

"இந்தக் கணத்தில் இவனும் நானும் ஒன்று என்று கொள்வதன் மூலம் நான் என் பொறுப்புகளைத் தட்டிடிக்கழிக்க முயல்கிறேன். இவனும் நானும் ஒன்றல்ல. நான் இவனை விட அதிக வாய்ப்புகளை பெற்றவன், அதிக வசதிகள் உள்ளவன். எனவே அதிக பொறுப்புகள் உள்ளவன். இந்த சமூக அவலங்களை போக்க வேண்டிய பொறுப்புகளை உடையவனாகிறேன்.நான் இந்த சிரமங்களை, இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன்".

- ஆதவன்., காகித மலர்கள் ...

ஆமாம் நான் இந்த நிலையை ஒப்புகொள்ள வேண்டியவன் அல்ல. இதற்கு பரிகாரம் பண்ண வேண்டியவன்.

பரிகாரத்தைத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். தேடல் விரைவில் முற்றும்.

Comments

Popular posts from this blog

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)