Skip to main content

மகளிர் தினம்...மறுதினம் ?

இன்னும் ஓரிரு நாட்களில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படும்.

ஆமாம் அனுசரிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.

ஆம் போற்றுதலுக்குரியவள் அவள்.

மகளிர் தின சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பப்படும். மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு தள்ளுபடி விற்பனைகளில் பல மணிநேரம் செலவிடுவோம்.  சல்யூட் விமன் தொடங்கி  பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போன்று பல தரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் , கவிதை , பேஸ்புக் ஸ்டேடஸ்  இன்ன பிற. பல பெண்களை நினைவுகூர்வோம். பெண் தாயாகவும் , மனைவியாகவும், மகளாகவும் , ஆயாவாகவும் , வேலைக்காரியாகவும் , ஆசிரியையாகவும் ,  ஆசானாகவும் , போகப்பொருளாகவும் , ஏன் தெய்வமாகவும் இருப்பதை உணர்ந்து சிலிர்ப்படைந்து அவளை எண்ணி பெருமிதம் கொள்வோம். ஒவ்வொரு ஆணின் மகத்தான வெற்றிக்குப்பின்னால் இருப்பது ஒரு பெண் என்று நம்முடைய பணிவினை பறைசாற்றுவோம். எல்லாவற்றையும் விட உயர்ந்தவள் பெண் என்று சூளுரைப்போம்.

ஆம் போற்றுதலுக்குரியவள் அவள்.

இன்னொரு காலைப்பொழுதில் ,

வீட்டில் உங்களை சரிசமமாக நடத்துவதா ? கோபம் வரும் எங்களுக்குபேருந்தில் பயணம் செய்யும்போது நாங்கள் பார்வைகளால் உங்களை சுட்டெரிப்போம்; உங்களுக்கென்று ஒதுக்கிய இருக்கைகளில் அமர்ந்து உங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளக்குவோம்; தெருக்களில்கூட்ட நெரிசலில் உங்களை வேசிகளாய் பாவிப்போம்;  அலுவலகத்தில் சக ஊழியராய், சபலராய் உங்களை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி இன்புறுவோம். சினிமா பாணியில் உன்னை உன் சிறப்பை கேலிக்கு உள்ளாக்குவோம்; அமலா பால் போல் இருக்கிறாய் என்போம்; சீறினால் அமில மழையில் உன்னை அமிழ்த்துவோம்காலில் போட்டு மிதிப்போம்; கற்பழிப்போம்.

இவற்றையும் தாண்டி நீ மீண்டுவந்தால்,  எதிர்த்து நீ முழங்கினால்,

கவலைப்படாதே நாங்கள் உன் பக்கம் நிற்ப்போம் . உன்னை வீர மங்கையென்று; மரணத்தை வென்றவள் என்று பெருமிதம் கொள்வோம். உனது பெயரில் , உன் ஞாபகமாக விருதொன்றை அறிவிப்போம். உன் போல் உள்ளவர்களுக்கு விருதளித்து போற்றுவோம். புகழ்வோம்.

சாதாரண பெண்களை உன்போல உருவாக்க , விருதுகளை வாங்கி குவிக்க எங்களால் முடிந்தவற்றை செவ்வனே செய்வோம். அர்ப்பணிப்போம்.

ஆம் போற்றுதலுக்குரியவள் அவள்.

பாரதி பாடிட்டடான் எங்கள கேக்காம..,

மனதில் உறுதி வேண்டும் ; கண் திறந்திட வேண்டும் ;
நினைவு நல்லது வேண்டும்பெண் விடுதலை வேண்டும் ;


நாங்க முனுமுனுப்பதோ : அடடா அல்வா துண்டு இடுப்பு ...

Comments

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...