வேன்யு : போத்தனூர் G.D. டேங்க் செட்டியார் வீட்டு புளியமரத்தடி
பவுலர் : சந்துரு
பேட்ஸ்மேன் : விக்னேஷ்
பௌண்டரி : தண்ணி பைப் காம்பவுண்டு சுவர் – 4 ரன், அசோக மாமா ஆட்டுசாலை – 2 granted,ருக்கு வீட்டு சுவர் - 2 granted.
எனக்கு நினைவுதெரிஞ்சு சுமார் எட்டு வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். அப்போ எனக்கு கிரிக்கெட்டப்பத்தி அவ்வளவா தெரியாதுன்னாலும் வீட்ல விஸ்வாஸ், பாலு, கண்ணன் அண்ணா , சஞ்ஜீவ் அண்ணா எல்லரோடையும் போய் விளையாடுவேன். அப்படி விளயாடிட்டிருந்த எனக்கு கிரிக்கெட்ல ஆர்வம் வரதுக்கு காரணமா இருந்தவர்கள் ரெண்டு பேர். ஒருத்தர் வெஸ்ட்இண்டீஸின் ப்ரையன் லாரா, இன்னொருத்தர் வீட்டு பக்கத்தில் இருந்த ஜெயராம் போஸ்ட்மாஸ்டர். போஸ்ட்மாஸ்டர் எப்பவுமே என்ன ஸ்ரீகாந்த்’ன்னு தான் கூப்பிடுவார். சும்மா நான் பேட்டை வச்சு டொக், டொக்ன்னு தட்டினா உடனே பலே ஸ்ரீகாந்த்ன்னு சொல்லுவார்.(இப்படி இவரு உசுப்பேத்தி விட்டு உசுப்பேத்தி விட்டே உடம்ப ரணகளமகிட்டார்) .
நாங்க எல்லாம் சேர்ந்து விளையாடுவது வீட்டுக்கு எதிரே உள்ள புளிய மரத்தடியில் தான்.நான், விஸ்வாஸ்,பாலன், கண்ணன் அண்ணா, சஞ்ஜீவ் அண்ணான்னு எங்க வீட்டிலேயே ஒரு டீம் இருக்கும். நான் விளையாட ஆரம்பிச்ச நாட்கள்ல என்னுடைய வீட்டிலேயே எனக்கு நிறைய கோச் இருந்தார்கள். இப்பிடி ஆடு அப்படி ஆடுன்னு ஆளாளுக்கு டிப்ஸ் கொடுத்து என்னை மெருகேற்றி இன்னக்கி இந்த நிலைமைக்கி ஆளாக்கி இருக்கிறார்கள். எங்களுடைய ஹோம் கிரௌண்டான புளியமரத்தடியில் விளையாட அவ்வப்போது வெளியிலிருந்தும் “like a short county stinct” ஆட்கள் வந்ததுண்டு. அவர்களில் அப்பநாயக்கம்பட்டி சந்துரு, பக்கத்துக்கு காம்பவுண்ட் சாய், கண்ணன் அண்ணாவின் ஒரு சில நண்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அந்த காலத்தில் எங்களுக்கென்று கிரிக்கெட் கிட் கிடையாது. போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் பின்னாடி உள்ள பெரியசாமியின் விறகு கடையிலிருந்து சட்டையில்லாத தாத்தா கை வண்டியில் வைத்து கொண்டு வரும் சவுக்கு கட்டைகள்தான் எங்களுடைய ஸ்டம்ப். அந்த சவுக்கு கட்டையின் இடையிடையே கருப்பு நிறத்தில் வட்டமாக இருக்கும் கனுக்கள்தாம் எங்களுடைய ஸ்டம்ப் காம் (stump camera). பேட்டும் அது போலவே ஏதாவது ஒரு மரத்திலான பலகை தான். டாஸ் போட எங்களிடம் காயின் கிடையாது. ஒரு சின்ன தட்டையான ஓட்டு துண்டில் செடியை பிடுங்கி தேய்த்து பச்சை நிறத்திலாக்கி ஒரு பக்கம் சிவப்பு மறுபக்கம் பச்சைன்னு டாஸ் போடுவோம்.
எங்களுடைய கிரிக்கெட்டில் சில ஸ்பெஷல் ரூல்ஸ் உண்டு. பவுலர் சைடில் உள்ள இடத்தில் ஸ்டம்ப்க்கு பதில் ஒரு சின்ன கல். ரன் அவுட் செய்யும் போது பவுலர் கால கல்லுமேல வச்சு கனெக்ஷன்ன்னு அவுட் பண்ணனும், அது போக நாயக்கர் வீட்டு சுவற்றில் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல புல்டாஸ்ஸா பந்து பட்டா அவுட், வீட்டு காம்பவுண்ட் தாண்டி புல்டாஸ்ஸா பந்து போனா அவுட், அசோக மாமா ஆட்டுசாலையின் மேல மூனு தடவைக்கு மேல் பந்த அடிச்சா அவுட்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. இதுபோக கொஞ்சம் ஏமாந்தவன் கிடைச்ச விஸ்வாஸ் மாதிரி ஆளுங்க புதுசு புதுசா பல “Instant Rules” உருவாக்கினதும் உண்டு.
கண்ணன் அண்ணாவோட ஸ்பெஷாலிட்டியே அவரோட “Solid Defence” தான். தமிழ்ல கட்டை போடறதுன்னு சொல்லுவோம். அப்படியே straight bat’ ட்ல தரயப்பாத்து நேர்த்திய பந்தை அமுக்கவது அவரோட ஸ்டைல். கிட்டத்தட்ட Dravid’s defence. சஞ்ஜீவ் அண்ணா அப்படியே பந்தை மடக்கி அடிக்கறதுல வல்லவர். விஸ்வாஸ் அவ்வப்போது சில நல்ல ஷாட்ஸ் ஆடினாலும் அவன் கட்டை போட்டு கழுத்தறுப்பான். இவன் போடற கட்டைக்கு தமிழ்ல மரண கட்டை, தர்ம கட்டைன்னு சொல்லுவோம். முடிஞ்சவரை ஒன்னு ரெண்டு தடவை அவுட் ஆகியும் ஏமாத்தி காஜ் வாங்குவான்.
பாலுவோட கிரிக்கெட் ஸ்கில் பத்தி சொல்லனும்னா ரொம்ப சிம்பிள். ரெண்டு கால்களையும் அகற்றி வைத்துக்கொண்டு பேட்டை நல்லா வீசு வீசுன்னு வீசுவான். கிட்டத்தட்ட நம்ம ஜவகல் ஸ்ரீநாத் மாதிரியே. பவுலிங்கும் ஸ்ரீநாத் மாதிரியே எல்லாரையும் ஒரு பக்கம் பீல்டிங் நிக்க வச்சு மற்றொரு பக்கம் பந்த எறியறதும், “Full Toss” ஆ பேட்ஸ்மேன் தலைக்குமேலால “Wicket” மேல பந்து எறியறதும் ஒரு ஸ்பெஷாலிட்டி. விஸ்வாஸ் பல தடவை இந்த மாதிரி தலைக்கு மேல் வர்ற புல்டாஸ் பால்ல அவுட் ஆகி அழுதது இன்னும் எனக்கு நினைவிருக்கு.
“Am very fortunate to play along with Sachin” ன்னு Shewag சொல்ற மாதிரி இவங்கள போல ஜாம்பவான்கள் கூட கிரிக்கெட் விளையாடினது எனக்கு பெருமைதான் (ஹி ஹி...).

Comments
Post a Comment