பயணம் ?
இல்லை திட்டம்,
ஆகச் சீற்றம் ,
ஜல்தி ஓட்டம் ,
ரன்னிங் ஏற்றம்,
அசால்ட்டு நோட்டம்,
ஜன்னலோரம் ,
மழைச்சாரல் ,
சில்லென காத்து ,
கின்லே பாட்டில் ,
பிஸ்கட் பாக்கெட்,
எண்ணெய் தோய்ந்த இருக்கை,
சக பயணிகள் ,
செல் போன் பேச்சு ,
எஸ் எம் எஸ் , கீச்சு ,
தூக்கம் போச்சு,
செல்போன் பாட்டு,
புஷ் பாக் சீட்டு ,
ஹை பீம் லைட்டு,
லேட்டஸ்ட் பாட்டு ,
லவுட் ஸ்பீக்கர்,
ஹார்ன் சத்தம்,
அரைகுறை தூக்கம்,
குறட்டை சத்தம்,
குருவிச்சத்தம்,
விடியற்பொழுது,
வீட்டு முற்றம்
நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)
Comments
Post a Comment