பயணம் -
நம்முடைய உள் உணர்ச்சிகளை குறித்தும், நம் பலம் மற்றும் பலவீனங்களைக் குறித்தும், நம்முடைய சமூக கண்ணோட்டத்தினை குறித்தும், சக மனிதர்களைக் குறித்தும், இன்ன பல இயல்புகளைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள, நம்மால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, யாராலும் ஆக்கிரமித்துக்கொள்ள இயலாத, நமக்கே நமக்கான தருணம்.

எனக்கு பயணித்தல் என்பது பிடித்தமான, மனதிற்கு ஒருவித மகிழ்வை தரக்கூடிய நல்லதொரு அனுபவமாகவே இருந்த வந்துள்ளது. ஆனால் ஒரு பயணத்திற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்வதும் , அதற்குத் தேவையான ஒரு முன்னேர்பாட்டினை செய்வதும்தான் எனக்கு சிறிதும் அறிவிற்கு எட்டாததாகவும், மனதிற்கு தொய்வு தரக்கூடியாதகவும் இருக்கின்றது . மற்றபடி பயணம் என்பது ஆழ்ந்த தியானத்தில் என்னை ஆட்படுதிக்கொள்வதர்க்கு இணையான ஒரு சிறந்த நிகழ்வாகவே இருக்கும்.
ஒரு சிறந்த அனுபவத்தை நமக்கு அறிமுகப்படுத்துவதனாலேயோ, வாழ்விற்கு தேவையானதொரு பாடத்தை நம்மை அறியாமலேயே நமக்குப் புகட்டுவதனாலேயோ ,வாழ்வில் நாம் சந்திக்கவேண்டிய, நாம் காணவேண்டிய சிலவற்றை நமக்கு கிடைக்கச்செய்வதனாலேயோ,இன்ன பிறவற்றாலோ பயணித்தலை ஒரு தனித்துவம் வாய்ந்த உணர்வாகவே நான் காண்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் பயண நேரம் முழுவதும் ஒருவித சீரான மனநிலையும், அபரிமிதமான மன நிம்மதியும், இந்த சமய விரயமானது வேரேதும் செய்ய இயலாத, வெரெதர்க்கும் பயன்படுத்த முடியாத, எனக்கே எனக்கான தருணமாகவே நான் கருதுகிறேன். ஒவ்வொரு நொடிப்பொழுதும் நான் எனக்குப் பிடித்தவற்றை பற்றி சிந்திக்கவும் , வேண்டியவற்றை கண்டு இன்புறவும், பிறரது ஆக்கிரமிப்புகளில் இருந்து என் மனம் நீங்கி இருத்தலாலும் நான் இத்தகைய பயண நேரத்தினை பெரிதும் விரும்புகிறேன்.
ஒவ்வொரு பயணத்தின்போதும் எனக்கு ஏற்படுகின்ற அனுபவம் வேரொருவர்க்கும் வாய்க்காதது என்ற பிரமிப்பும், எனக்கு ஏற்படுகின்ற மனத்தெளிவும், எண்ணச்சிதரல்களும், பலவற்றை காண்பதற்கும், சிலவற்றைத் தவிர்பதர்க்கும், பலருடைய தொடர்பிற்கும் , பலவித கருத்துப்
பரிமாறுதலுக்கும் , ஒரு சில உணர்வுகளுக்கும் , இப்படி பலவற்றினாலும், பயணிப்பது ஒரு
தனித்துவம் வாய்ந்த, வாழ்வில் மறுக்க முடியாத / மறக்க முடியாத வாய்ப்பாகவே அமையும்.
தனித்துவம் வாய்ந்த, வாழ்வில் மறுக்க முடியாத / மறக்க முடியாத வாய்ப்பாகவே அமையும்.
Comments
Post a Comment