Skip to main content

பொரிமா !! பொரிமா !!!

என்கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு . எந்தவொரு வேலையையும் அவ்வளவு சீக்கிரமா பண்ணிட மாட்டேன். நல்லா நிதானமா, பொரிமா (பாண்டி தமிழ் நினைவுக்கு வந்திட்டுது), ஒரு தடவைக்கு நாலு தடவை மொறயா யோசிச்சு , பண்ணவா வேண்டாமா , இன்னிக்கா நாளைக்க, இப்பவேவா இல்ல அப்புரமாவான்னு எனக்குள்ள ஒரு போர் (நீங்க நினைக்கும் அளவுக்கு லிபியாவோ , ஒடிசி டானோ கிடையாது) நடக்கும். பிறகு அதுபத்தி கொஞ்சம் கூட யோசிக்காமலேயே காலத்தை நகர்த்தி ஒரு நாள் திடீர்னு (கோமனத்தில இடி விழுந்த மாதிரி...courtesy என் உறவினர்கள்) போய் அந்த வேலையை முடிச்சிட்டு வந்து உக்காந்து யோசிச்சு பாத்தா "எல்லார்க்கும் இந்த பாக்கியம் கிடைக்குமான்னு" தான் எனக்கு தோனும்.

என்னைப்பற்றி நன்கரிந்தவர்களுக்கு இது பழகிப்போன விஷயம். என்ன தெரியாம என்கிட்டே ஒரு வேலையை ஒப்படச்சவருக்கு இது மண்டகாயர விஷயம். ஆகையினால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். யாரையும் அந்த மாதிரி ஒரு நிலைக்கு ஆளாக்குவது இல்லை என்று. அதுக்காக நான் என்ன மாத்திக்க போறதில்லை. மாறாக என்னை நானே ப்ரொமோட் பண்ணப்போறேன். என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு நான் என்னைப்பற்றி தெரியவைக்க, புரியவைக்கப்போரேன்.

ஆறிலிருந்து அறுபது வரை சினிமாவில் வந்த ஒரு டயலாக் இதோ:

"புரிஞ்சவங்களுக்கு சொல்லதேவையும் இல்ல;
புரியாதவங்களுக்கு சொல்லிப்ப்ரயோஜனமும் இல்ல"

அது சரி ... இப்பவே புரிய வைப்போமா இல்ல அப்புறமா மெதுவா புரிய வெப்பமா !!!!

Comments

  1. நாயே, அடிவாங்கியே சாவப்போற... :)

    இப்படியே அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு தாட்டி எழுது டா பரதேசி...

    இப்படியாகவும், இன்ன பிறவாவும் வாழ்த்துகளுடன்,
    கண்ணண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...