மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை.
சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது. ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.
அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!!
ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும் ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்க்ஷன் வகையறாக்கள், அது போக, ப்ளாக் சுவான் - நசீம் நிக்கோலஸ் தலேப் ,
வின்னிங் வேய்ஸ் - ஹர்ஷா போக்லே , செவன் ஹபிட்ஸ் ... - ஸ்டெபன் கோவே , லீடர் இன் யு - டேல் கர்னீஜ் , ரியாலிட்டி செக் - கய் கவாசாகி , ஔட்லயர்ஸ் - மால்கம் க்லாடுவெல்
இத்யாதி இத்யாதி !!!!
எதை படிக்க. சரி ஒவ்வொரு முறையும் படித்து பாதியில் விட்ட ஒரு ஏழு புத்தகங்கள் கண்ணில்ப்பட்டன. சரி அவையெல்லாம் முழுமை அடையட்டும் என்று எண்ணி கையில் எடுத்தேன்.
முதலில் எடுத்த புத்தகத்தை முன்பு எதுவரை படித்திருந்தேன் என்று நினைவில்லை. சரி புக் மார்க் பண்ணியதை பின்தொடருவோம் என்றால் கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களின் முனை மடிக்கப் பட்டிருந்தது, இரண்டாவது எடுத்த புத்தகத்தில் சரியான புக் மார்க் இருந்தது. நிம்மதி. ஆனால் இதுவரை படித்தது நினைவில் இல்லை.
சனியன் என்னைக்கோ பார்த்த படம் , கேட்ட பாட்டு நல்லா ஞாபகத்துல இருக்குது, இதுக்கு என்ன வந்துதாம் !!!
அம்மாவின் குரல் : மருங்காமூனை !!! நல்லா மனசுல பதியரமாதிரி படிக்கனமே.
வாசலில் காலிங் பெல் சத்தம். அட நேற்று அமேசான் ' ல ஆர்டர் பண்ணின " தி மேன் கிரிக்கெட் லவ்டு பேக் - சச்சின் " புத்தகம் வந்தாயிற்று.
இப்போ படிப்பது "ஆதவன்" அவர்களுடைய சிறுகதைகள் தொகுப்பு. ஆமாம் சிறுகதைன்னா தான் நமக்கு சேப் (Safe) . பாதில நிருத்தனும்னா கூட உடனே
நிறுத்தலாம்.
[ மானேஜேர் குரல் : ப்ரிங் இட் டு எ லாஜிக்கல் என்டு அண்ட் மூவ் ஆன் டு தி நெக்ஸ்ட் டாஸ்க் ...]
டெபனட்லி லாஜிக்கல் என்ட் தான்.
Comments
Post a Comment