Skip to main content

சே குவேரா – ஓர் யதார்த்தவாதி

சே பிடெல் காஸ்ட்ரோவிற்கு எழுதிய கடிதத்தில்,

“ என்னுடைய மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் எதையும் விட்டுசெல்லவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஓர் அரசு இருக்கிறது . நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம் ”.

சே தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,

“ தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வருமயையும் கண்டு நம்மைப்போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.

எனது அன்பிற்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப்படுகிறேன். ஆனால் பிற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களை சுரண்டும் எதிரியோடு போரிடப்போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது. “

சே தனது குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்,

“ என்னைப்பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுபவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன். நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வேண்டும். கஷ்ட்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமில்லை. புரட்சி ஒன்றே முக்கியமானதாகும்.எல்லாவற்றையும் விட எப்போதும் உலகில் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். ”

சே தனது மூத்த மகள் ஹில்டிடாவிட்கு எழுதிய கடிதத்தில்,

“ இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். உன்னை தயார் செய்துகொள். .புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள். ”

Comments

  1. ம்ம்.. கலக்கு மச்சி. இங்கே ஏதாவது எழுதிகிட்டே இருப்பியாம். நல்ல நடை கைவரும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

லாஜிக்கல் என்ட்

மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  அறுவைசிகிச்சைக்குப்பின் இரண்டு வார ஓய்வு அவசியம் என்று மருத்துவர் கூறியதால் நான் வீட்டில். அட்ரா சக்கை . அட்ரா சக்கை. சாதரணமாக புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்தான் நான். புத்தக புழுவா  இல்லை புத்தக பெருச்சாளியா ன்னு எல்லாம் சொல்லத்தெரியாது.  ஓர் அளவிற்கு படிப்பேன். வெகு நாட்களாக புத்தகம் படிக்கும் நோக்கம் இருந்தும் இப்போ அப்போ என்று தள்ளி போட்டுக்கொண்டே இருந்தேன்.   அம்மா சொல்றது தான் ஞாபகத்திற்கு வரது : மருங்கனமே அதுக்கெல்லாம் !!! ஒரு மாற்றத்திற்கு புத்தகங்களிடம் தஞ்சமடையலாம் என்று எண்ணி என்னுடைய மிகச்சிறிய  அளவிலான புத்தக அலமாறையில் நோட்டமிட்டேன்.  பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கென் பொல்லெட் (Ken Follet ) , இடையிடையே சிலபல ஜான் க்ரிஷம் ( John Grisham ) மற்றும் நெல்சன் டிமில்லி  ( Nelson Demille ) , ஒன்றிரண்டு பிரெடெரிக் போர்சித் (Frederick Forsyth ) மற்றும்   ஜெப்ப்ரே ஆர்ச்சர் (Jeffery Archer ) போன்ற பிக்...

ட்ராவல்

பயணம் ?    இல்லை திட்டம், ஆகச் சீற்றம் , ஜல்தி ஓட்டம் , ரன்னிங் ஏற்றம், அசால்ட்டு நோட்டம்,  ஜன்னலோரம் ,  மழைச்சாரல் ,  சில்லென காத்து , கின்லே பாட்டில் ,  பிஸ்கட் பாக்கெட்,  எண்ணெய் தோய்ந்த இருக்கை,  சக பயணிகள் ,  செல் போன் பேச்சு ,    எஸ் எம் எஸ் , கீச்சு ,  தூக்கம் போச்சு,   செல்போன் பாட்டு, புஷ் பாக் சீட்டு ,  ஹை பீம் லைட்டு,  லேட்டஸ்ட் பாட்டு , லவுட் ஸ்பீக்கர், ஹார்ன் சத்தம்,   அரைகுறை தூக்கம்,  குறட்டை சத்தம், குருவிச்சத்தம், விடியற்பொழுது, வீட்டு முற்றம் நினைச்சு பாத்தா சிரிப்பு மட்டும் :)   

நான் - ஸ்மார்ட்போன் (Non-Smartphone)

சில நாட்களாக எனக்குள் ஒருவன் என்னை கேட்டபடியே இருக்கிறான். ஆமாம் இன்றைய நவீன யுக விஞ்ஞான வளர்ச்சி அல்லது கலாச்சார வளர்ச்சி / வீழ்ச்சி ( அட இந்த ஸ்மார்ட் போன் , டாப்லெட் வகையறாக்கள் தாம் ) , மற்றும் நம் வாழ்வில் அதன் தாக்கம் இதைப்பற்றிய உன் பார்வை. நீ அதற்க்கு ஆதரவா இல்லை எதிர்ப்பா ? நிற்க. நான் பலமுறை இது குறித்த பல தகவல்களை , பல தரப்பட்ட சாதக பாதகங்கள்  குறித்த கருத்துக்ககளை இன்டர்நெட் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்ததாலும், அதனுடைய தாக்கம் சற்றே அதிகமாக என்னுடைய தினசரி வாழ்வில் இருப்பதை உணர்ந்துள்ளதாலும் நான் இதுவரை இம்மாற்றத்தினை ஒரு பெரிய சலிப்புடன் ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன் என்பதே சரியான ஒப்புதலாக இருக்கும். நம்முடைய சமூகம் ,அரசியல் மற்றும்  ஆட்சிமுறை குறித்து வெகுண்டெழுந்து எப்படி ஒன்றும் செய்ய இயலாமல், சொல்லப்போனால் செய்வதற்கு முனையாமல், வக்கற்றுப்போய் கோபமுற்று ஒரு மூலையில் வெறும் பார்வையாளனாக சலிப்புடன் (ஆமாம் சலிப்புடனே..) ஏற்றுக்கொண்டு காலம் கடத்துகிறேனோ அவ்வாறே இதிலும். இதிலென்ன ஆச்சர்யம் வ...