சம்மர் கேம்ப் என்ற வார்த்தை எல்லா பெற்றோர் மற்றும் குழந்தைகள் சகஜமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நான் என்னுடைய சம்மர் கேம்ப் என்னவாயிருக்கும்னு யோசிச்சதுல வந்தது தான் இங்கு நான் எழுதியிருப்பது.
என்னுடைய சின்ன வயசில பள்ளி விடுமுறை நாட்களை எப்படி செலவிட்டேன்னு யோசிச்சா ரொம்ப மகிழ்ச்சியான பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருது. லீவ் நாட்கள்ல காலைல எழுந்து சாப்பிட்டு முடிச்சு வெளிய வந்த திரும்ப அடுத்ததா எப்போ பசிக்கிதோ அப்போதான் வீட்டைப்பத்தி நினைப்பேன். முதல்ல வீட்டு முன்னாடி இருக்கிற புளிய மரத்தடியில் கிரிக்கெட் விளையாடணும், அது முடிஞ்சா இருக்கவே இருக்கு G.D. வாட்டர் டேங்க். G.D. வாட்டர் டேங்க் மேல ஒவ்வொரு படியா ஏறி உச்சியில போய் உக்காந்து அரட்டை அடிக்கறது , புளியங்காய் சாப்பிடறது, டேங்க் வாட்ச்மேன் காளிமுத்து @ செந்திலுக்கு தெரியாம ஏறி விளயடரதுல ஒரு த்ரில். அது போதாதுன்னு பக்கத்திலுள்ள G.D. மெடிக்கல்ஸ் ஹாஸ்பிட்டல் காம்பௌண்டுகுள்ள ஓடிப்பிடிச்சு விளயாடறதும், இடையில் தண்ணி தாகம் எடுத்தா காம்பௌண்டு வழியா வந்து ரோட்டுமேல இருக்கற உப்புத்தண்ணி குழாயில ஸ்வயின் ப்ளு அது இதுன்னு எந்த கவலையும் இல்லாம தண்ணி குடிப்போம். சம்மர் வேகேஷன்ல வெயில் சூட்டைத்தணிக்க எங்களுக்கு ஏத்தமாதிரி பக்கத்தில் மேட்டூர், அன்னாபுரம் , சீனிவசநகர்ன்னு எல்லா ஏரியா கல்லுகுழியிலையும் போய் நீச்சலடிச்சிருக்கோம்.
இன்னொரு முக்கியமான பொழுதுபோக்கு சாயங்காலம் ஆனா வீட்டு முன்னாடி இருக்கற விநாயகர் கோவில் வாசலில் போய் உக்காந்துகிட்டு ரோட்டுமேல போற வண்டிகள எண்ணுவது. பொள்ளாச்சி மெயின் ரோட்ல இருக்கற ரயில்வே கேட் பழுதானா எல்லா பொள்ளாச்சி பஸ்சும் போத்தனூர் வழியா எங்க வீட்டு முன்னாடிதான் போகும். அந்த மாதிரி சமயத்தில கோவில் வாசல்ல போய் உக்காந்து போற ஒவ்வொரு பஸ்ஸையும் எண்ணுவோம் (அப்போ எங்களுக்கெல்லாம் மப்சல் பஸ்ஸ பாத்த அப்படி ஒரு சந்தோஷம்). இன்னும் பைவ்ஸ்டார், பி.ஆர்.எம், கடல் புறா, எஸ்.ஆர்.டி வெண்புறா, ஏபிடி ஆனந்த்ன்னு பல பொள்ளாச்சி பஸ் பெயர் கூட ஞாபகத்தில் இருக்கு. போத்தனூர் சர்ச் கிரௌண்ட், கடைவீதி ,ரயில்வே ட்ராக்ன்னு சுத்தி கஷ்டப்பட்டு சேகரிச்ச 20 பைசா காயின ரயில்வே ட்ட்ராக்க்ல வச்சு, ரயில்வரதுக்காக காத்திருந்து பின் ரயில் போனதுக்க்கப்பறம் அந்த 20 பைசா காயின் மாக்நெட் ஆகியிருக்கும்னு ஒரு எதிர்பார்ப்போட பல 20 பைசாவ தொலச்சதுண்டு.
இதையெல்லாம் நினசுப்பாத்தா இந்த காலத்து குழந்தைகளோட சம்மர் கேம்ப் எனக்கு வருத்தத்தைதான் கொடுக்கிறது. சம்மர் வேகேஷன் முழுவதும் ஏதாவது ஒரு கிளாஸ்ன்னு : ஆர்ட் கிளாஸ், ஆர்ட் கிளாஸ் முடிஞ்சு வந்தா பேப்பர் க்ராப்டிங், அது முடிஞ்சா க்லே மொல்டிங், பாட்டு க்ளாஸ் , ஸ்விம்மிங் , ஹேன்ட்ரயிட்டிங் கிளாஸ்ன்னு ஒரே கிளாஸ் மயம். இப்படியே விடுமுறை முழுவதும் விளையாடாமல், வீடியோ கேம்ஸ், ஆன்லைன் கேம்ஸ், கார்டூன் , போகோன்னு வீட்டை விட்டு வெளியே வராமல், வியர்வை சிந்தாமல் இருப்பதினால் தான் இந்த கால குழந்தைகளுக்கு ஹெல்த் ப்ராப்ளம்ஸ் (ஹைப்பர் டென்ஷன், ஓவர் சென்சிடிவ்... யப்பா சாமி இப்பவே கண்ணக்கட்டுதே !!!) வருதோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.
குழந்தை பெரியவனான என்னவா வருவான், அவனுக்கு எதில ஆர்வம் இருக்குன்னு கண்டுபுடிக்கறேண்டா பேர்வழின்னு குழந்தைகளை 1008 கிளாசுக்கு அனுப்பி முழி பிதுங்க வச்சு கடைசியில அந்த குழந்தைக்கே தனக்கு எதுல ஆர்வம் இருக்குன்னு மறந்து போகம இருந்தா சரி.

Comments
Post a Comment