மனிதனின் உள்மனதில் உள்ள மிருகதனத்தை வெளியேற்ற ஒரு வடிகால் தேவைபடுகிறது. இந்த சமூகம் அத்தகைய க்ரூரதனத்தை நளினமாக , நாசூக்காக வெளியேற்ற பலவிதமான வழிகளை கொடுத்திருக்கிறது. நம் சமுதாயம் கபடி, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளயட்டினையும், உலக சமுதாயம் ரக்பி, கால்பந்து போன்ற விளயட்டினை மனிதன் தன் ஆக்ரோஷத்தினை வெளியேற்ற ஒரு வடிகாலாக கொடுத்திருக்கிறது.
இக்காலத்தில் வளர்ந்து வரும் தலைமுறையினர் தங்களுக்குள் அடங்கி கிடக்கின்ற இத்தகைய குரூரத்தை வெளிப்படுத்த இயலாமல், வெளிப்படுத்த போதுமான அளவு நேரமில்லாமல் தங்களுக்குள்ளேயே பூட்டிவைதுக்கொள்கின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் இவ்வேன்னங்களை வெளிப்படுத்த கொடூரமான காட்சிகளை தொலைகாட்சியில் பார்ப்பதும், கொடூரமான செயல்களை செய்திடவும் நேரிடுகிறது. இந்த நிலைக்கு இன்றைய சமுதாய மாற்றம் ஒரு முக்கிய காரணம் என்பது சிறிது வேதனையளிக்கிறது. வரும் தலைமுறையினர் வெளியே சென்று தனது எண்ணங்களை , ஆக்ரோஷத்தினை வெளிப்படுத்த பயன்படும் விளையாட்டுக்களை விளையாட போதுமான நேரமோ, இடமோ, சந்தர்ப்பமோ கிடைக்காமல் திணறுவது நாளைய உலகிற்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பது அப்பட்டமான உண்மை.

Comments
Post a Comment